ட்ரம்பை கொலை செய்ய முயன்ற நபர் தொடர்பில் FBI வெளியிட்ட புதிய தகவல்

Friday, July 19th, 2024

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) படுகொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பிலும் விரிவாக ஆய்வு செய்துள்ளதாக FBI அதிகாரிகள் பகீர் தகவல் ஒன்றை விசாரணையின் மூலம் அம்பலமாக்கியுள்ளனர்

அரச குடும்பத்து உறுப்பினர் டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயன்ற 20 வயதான தாமஸ் க்ரூக்ஸ், இணையத்தில் தமது இலக்கு தொடர்பில் விரிவாக ஆய்வு செய்துள்ளதோடு, இது குறித்து பல்வேறு தரவுகளை அவர் இணையத்தில் தேடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாமஸ் க்ரூக்ஸ் பயன்படுத்தியுள்ள தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களை ஆய்வுக்கு உட்படுத்திய FBI அதிகாரிகள் பெயர் குறிப்பிடாத பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர் குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளமையை கண்டு பிடித்துள்ளனர்.

மேலும் இவர் டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும், சிகாகோவில் நடக்கவிருக்கும் ஜனநாயக தேசிய மாநாட்டிற்கான முக்கிய திகதிகள் உள்ளிட்ட தரவுகளையும் பதிவு செய்து வைத்திருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று ட்ரம்ப் மேடையேறும் ஒருமணி நேரத்திற்கு முன்னர், சந்தேகத்திற்கு இடமளிக்கும் நடமாட்டம் தொடர்பில் உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, நாட்டின் அரச - தனியார் பங்குடமை நிறுவனங்கள் சிலவும் மர...
பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை - புவியியல் தகவல் அமைப்புகளில் வீதிக் கட்டமைப்பை ...
இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் - ஜனாத...

தடுப்பு முகாம்களில் வாழ்ந்த எம்மை தலைநிமிர்ந்து வாழவைத்தவர் டக்ளஸ் தேவானந்தா - மெலிஞ்சிமுனை கிராம தல...
பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்றுமுதல் ஆரம்பம் - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமக...
பாரிய நில அதிர்வின் எதிரொலி - அச்சத்தில் வீடுகளுக்கு வெளியே வாழும் துருக்கி - சிரியா மக்கள்!