டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு – இலங்கையும் பங்கேற்பு!
Tuesday, January 17th, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் குறித்த நிகழ்வில் பங்குப்பற்றவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான, ஜிமி கார்ட்டர், பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பாராக் ஒபாமா ஆகியோர் குறித்த நிகழ்வில் பங்குப்பற்றவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஹிலாரி கிளின்டனும் கலந்துக்கொள்ளவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
பாகிஸ்தானில் நிலநடுக்கம்!
ஜெரூஸலம் விவகாரத்தில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா!
அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புட்டினிற்கு அழைப்பு விடுக்கப்படும் - பிரேசில் ஜனாதிபதி லூயி...
|
|
|


