பாகிஸ்தானில் நிலநடுக்கம்!

Sunday, April 10th, 2016

பாகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. பெஷாவரில் இருந்து 248 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டு உள்ளது. இந்து குஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மாலை 3:58 மணியில் ஏற்பட்ட நிலநடுக்கம், பல நிமிடங்கள் உணரப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், சுவாத், சித்ரால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கமானது ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அதிர்ச்சி அடைந்த மக்கள் பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

இதுவரையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பிற சேதங்கள் குறித்தான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை…

பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக டெல்லி, ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலும் நிலநடுக்கமானது உணரப்பட்டு உள்ளது.

டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லியில் மக்கள் வீடுகளை விட்டு ஓடிவந்தனர். நிலநடுக்கம் காரணமாக டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது

Related posts: