ஜோடான்- இஸ்ரேல் இடையே முரண்பாடு!
ஜோடானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இராஜதந்திர முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஜோடான் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேலிய தூதுவராலயத்தை சேர்ந்த காவலர் ஒருவர் ஜோடானியரை சுட்டு கொன்றுள்ளார்.இது தவிர, மேலும் ஒரு ஜோடானியரும் துப்பாக்கி தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமானார்.
துப்பாக்கிப் பிரயோகம் செய்தவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என ஜோடானிய காவல்துறையினர் கோரியதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.சம்பந்தப்பட்ட இஸ்ரேலிய காவலர், சிறப்பு ராஜதந்திர சலுகையை கொண்டவர் என்பதனால், அவரை விசாரணை செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோடானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 1994ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் ஏற்பட்டுள்ள பாரதூரமான சம்பவம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளதுஜோடான் பிரஜை இஸ்ரேலிய காவலரை ஆயுதம் ஒன்றின் மூலம் காயமேற்படுத்தியதனை அடுத்தே, அவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக இஸ்ரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|
|


