பாராளுமன்றத்தை கைப்பற்ற சதாமின் மகள் களத்தில்!

Saturday, September 17th, 2016

 

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனின் மூத்த புதல்வி தலைமையிலான அரசியல் கூட்டணி எதிர்வரும் 2018 அந்த நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ளதாகா அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜோர்தானில் வசித்து வரும் முன்னாள் இராக் தலைவரின் மகள் ரகாட் சதாம் ஹுசைனுடன் தற்போதைக்கு ஈராக் நாட்டின் பழங்குடி கட்சிகள் சில அலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பின்புலம் வழங்கிய குற்றச்சாட்டில் ஈராக் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் கடந்த 2010 இல் இவருக்கு எதிராக இண்டபோல் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதும் ஜோர்தான் அரச குடும்பம் சர்வதேச பொலிஸார் கைது செய்ய அனுமதி வழங்கவில்லை.

அதன்பின்னர் இராக் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதன் விளைவாக தற்போது அவருக்கு இந்த அழைப்பு வந்துள்ளது.

satam

Related posts: