பாதுகாப்பு சபையின் கண்டன அறிக்கையை நிராகரித்தது வடகொரியா!

Thursday, February 16th, 2017

வட கொரியாவின் அண்மைய ஏவுகணைச் சோதனை குறித்த ஐ.நா பொதுப் பாதுகாப்பு சபையின் கண்டன அறிக்கையை வட கொரிய வெளியுறவு அமைச்சு நிராகரித்துள்ளது.

வட கொரிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி நேற்று வட கொரிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

‘எமது அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு தடை என்ற  ஐ.நா பாதுகாப்பு சபையின்  தீர்மானத்தினை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ என வட கொரிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்புக்களையும் மீறி தொடர்ச்சியாக ஏவுகணைச் சோதனை நடத்திவரும் வட கொரியா இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை எவுகணை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil-Daily-News_40837824345

Related posts: