அகதிகள் முகாமை மூடக்கோரிய போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்!
Tuesday, September 6th, 2016
ஜங்கிள் என அறியப்படும் அகதிகள் முகாமை மூடக்கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்க பிரான்ஸின் வடபகுதி நகரான காலேயின் ஆயிரக்கணக்கான மக்கள் தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நகரின் வழியாகச் செல்லும் முக்கிய சாலைகளில் லாரிகளும், பண்ணை வாகனங்களும் ஆக்கிரமித்து, போக்குவரத்து தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.துறைமுகத்திற்கு செல்வதைத் தடுக்கும் வகையில் உள்ளூர் மக்களும், வர்த்தக உரிமையாளர்களும் மனித சங்கிலி அமைக்க திட்டமிடுகின்றனர்.
பிரித்தானியாவுக்கு செல்ல எண்ணி போக முடியாமல் இருக்கின்ற 9 ஆயிரம் பேர் இந்த ஜங்கிள் முகாமில் மேசமான நிலைமையில் இப்போது வாழ்ந்து வருகின்றனர்.இவ்வளவு அதிகமானோர் நகரின் சகஜ வாழ்க்கையை சீர்குலையச் செய்வதாக அந் நகரின் குடியேறிகள்.


Related posts:
துருக்கி இராணுவப்புரட்சி தொடர்பில் மதத்தலைவருக்கு பிடியாணை!
உலகின் அதிக வேக புகையிரதத்தை அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்த சீனா திட்டம்!
இரு நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
|
|
|


