ஐ.எஸ். தீவிரவாதிகளின் ரசாயன ஆயுத கிடங்குகள் மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்!

Saturday, March 12th, 2016

ஐ.எஸ். தீவிரவாதிகளின் ரசாயன ஆயுத இளவரசன் என்று அழைக்கப்பட்டு வந்தவர் சுலைமான் தாவூத் அல் பக்கார் என்ற அபு தாவூத். இவர் அமெரிக்க கூட்டுப்படைகளால் கடந்த மாதம் ஈராக்கில் உயிரோடு பிடிக்கப்பட்டுள்ளார். ஆனால் இது குறித்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் இப்போதுதான் வெளியிட்டுள்ளது.

அவரிடம் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய விசாரணையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன ஆயுதக்கிடங்குகள் பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அந்த தகவல்களின் அடிப்படையில் ஈராக்கில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் ரசாயன ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து முதன் முதலாக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின.

இது குறித்த தகவல்களை பென்டகன் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி தெரியவரவதாவது – ‘‘அபு தாவூத் உயிருடன் பிடிபட்டிருப்பது, ஈராக், சிரியா ஆகிய இரு நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வருகிற நடவடிக்கைகளுக்கு வரமாக அமைந்துள்ளது. இதன்விளைவாக உடனடி பலன்கள் கிடைத்துள்ளன. அவரை உயிருடன் பிடித்திருப்பதால், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: