ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் அகதிகளை குடியமர்த்த புதிய சட்டம்!

Friday, September 2nd, 2016

ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் புதிய சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிய அகதிகள் எங்கு தங்க வேண்டும் என்பதை தெரிவிக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசின் சலுகைகளை பெற அனைத்து அகதிகளும் மாகாணத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.மேலும், நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ அவர்களுக்கான வீடு ஒதுக்கித் தரப்படும்.அங்கு அவர்கள் மூன்றாண்டுகள் வசிக்க வேண்டும்.

ஜெர்மானிய சமூகத்தில் அகதிகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட பல சட்டத்திட்டங்களில் இதுவும் ஒன்று.ஒரே நாடுகளிலிருந்து வந்த பல அகதிகளை ஒன்றிணைப்பதற்கு பதிலாக இந்த நடைமுறை கையாளப்படுகிறது.

ஆனால், அகதிகள் மொழியை கற்பதிலும் மற்றும் வேலைத் தேடுவதற்கும் அல்லது பயிற்சி பெறுவதற்கும் உதவியாக இந்த ஒருங்கிணைப்பானது இருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

151207190958_migrant_germany_640x360_reuters_nocredit

Related posts: