ஜெருசலம் ஆர்ப்பாட்டத்தில் பலஸ்தீனர் சுட்டுக் படுகொலை!

Thursday, October 13th, 2016

ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் சில்வான் பகுதியில் இடம்பெற்ற மோதலில் இஸ்ரேல் படையினர் பலஸ்தீனர் ஒருவரை சுட்டு படுகொலை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யூதர்களின் விடுமுறை தினமான யோம் கிப்பூரை ஒட்டி ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேல் பெரும் எண்ணிக்கையிலான படையினரை அங்கு குவித்துள்ளது. இதில் செவ்வாய் இரவு ஏற்பட்ட மோதலில் 20 வயது அலி ஷியுகி என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

சில்வான் பகுதியில் இஸ்ரேல் படை சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டபோதே அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. ஷியுகியின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் அவரை காப்பாற்றும் முயற்சியாக அம்புலன் வண்டிகள் அணுகுவதையும் இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது.

ஷியுகி உடலை இஸ்ரேல் படையினர் பறிமுதல் செய்யும் பயம் காரணமாக அவரது இறுதிக் கிரியை விரைவாக நடத்தப்பட்டுள்ளது. ஷியுகி 15 மாதம் இஸ்ரேலில் சிறை அனுபவித்த பின்னர் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே விடுதலை அடைந்திருந்ததாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

coltkn-10-13-fr-06152817734_4879747_12102016_mss_cmy

Related posts: