ஜமால் கசோகி கொலை : 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை!

ஊடகவியலாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட வழக்கில் 05 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் ரியாத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்நாட்டு சட்டமா அதிபர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் பின்னர், கசோகிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள குறித்த 5 அதிகாரிகளும் உத்தரவிட்டதாக சட்டமா அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார்.
Related posts:
இடி மின்னல் தாக்கி 323 மான்கள் பலி!
சர்வதேச சட்டங்களை சீனா மீறுகிறது - அமெரிக்கா குற்றச்சாட்டு!
அமெரிக்கா மீது வடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தும் - பென்டகன் !
|
|