காசாவின் ஒமாரி பள்ளிவாசல் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு – ஹமாஸ் தெரிவிப்பு!.
Saturday, December 9th, 2023
காசாவின் ஒமாரி பள்ளிவாசல் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தொல்பொருள் சின்னங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவது குற்றச் செயலாகும் என காசாவின் சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாரம்பரிய சின்னங்களை இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கு, யுனெஸ்கோ அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காசா வலியுறுத்தியுள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 104 பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
ஜப்பானில் நிலநடுக்கம் !
அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க தீர்மானம்!
வழமைக்குத் திரும்பியது குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் - ஒருநாள் சேவை இடம்பெறாது எனவும் ...
|
|
|


