ஜப்பானில் மீண்டும் பாரிய நிலநடுக்கம்!

Saturday, April 16th, 2016
ஜப்பானின் குவாமோட்டோ நகரத்திற்கு அருகே பாரிய இரு வேறு நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மிகவும் சக்தி வாய்ந்த இந்நிலடுக்கமானது, ரிக்டர் அளவில் 7.1 மற்றும் 7.4 என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், பின்னர் அது விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கியூஷூ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், கடல் நீரில் கடுமையான சுழற்சி இருக்கும் என ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் எனவும் அவர்களை மீட்குமாறு கோரி தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த பகுதியில் நேற்றும் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. இதன்போது, சுமார் ஒன்பது பேர் வரை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: