ஜப்பானியர்களை மீட்பது தொடர்பில் அவசர கூட்டம்!

Saturday, April 15th, 2017

தென் கொரியாவில் நெருக்கடிநிலை ஏற்படும் பட்சத்தில் அங்குள்ள சுமார் 60 ஆயிரம் ஜப்பானியர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது தொடர்பில் ஜப்பானின் தேசிய பாதுகாப்பு சபை ஆலோசனைகூ கூட்டத்தை நடத்தியுள்ளது.

வட கொரியாவின் அணுவாயுத திட்டங்கள் குறித்த கவலை அதிகரித்துவரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் இடம்பெற்றுள்ளது.இதன்போது, ஜப்பானிற்குள் நுழைவதற்கு சாத்தியமுள்ள தென் கொரிய அகதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை தென் கொரிய அரசு சம்மதித்தால் இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்களை ஜப்பான் அனுப்ப வேண்டும் என்றும் குறித்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.

அத்துடன், வட கொரிய இராணுவத்தினர் ஜப்பான் அகதிகள் போன்று நாட்டினுள் நுழைய முடியும் என்பதால் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறித்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: