ஜனாதிபதியின் சகோதரரின் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
Tuesday, October 3rd, 2017
வட கொரியா ஜனாதிபதி கிம் ஜொங்கின் சகோதரர் கிம் ஜோங் நாம் கடந்த பெப்ரவரி மாதம் மலேசியாவில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மயங்கி விழுந்த இவர் சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக இந்தோனேசியாவைச் சேர்ந்த சிட்டி அய்ஷ்யா(25) மற்றும் வியட்நாமைச் சேர்ந்த தேயன் தி ஹீயோங்(29) ஆகியோர் அவரின் முகத்தில் விஷத்தனமை வாய்ந்த இரசாயனத்தை பூசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் உள்ள ஷா அலாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த இரு பெண்களும் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அம் மனுவில் இவை அனைத்தையும், தொலைக்காட்சி ஏமாற்றும் நிகழ்ச்சி என நாங்கள் எண்ணியதாகவும் வட கொரிய அதிகாரிகள் தங்களை ஏமாற்றி இதை செய்ய வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த மரணத்திற்கும் தங்களும் எவ்வித தொடர்பும் இல்லை என வட கொரியா மறுத்துள்ளது.
இச் சம்பவம் பற்றி இரு பெண்களின் வழக்கறிஞர்கள், தெரிவித்தபோது, உண்மையான குற்றவாளிகள், மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டதாக வாதாடவுள்ளதாக தெரிவித்தனர்.
Related posts:
|
|
|


