சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பிரேசிலில் 25 பேர் உயிரிழப்பு!
Tuesday, January 9th, 2024
பிரேசிலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று நேற்றிரவு கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலின் பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் உள்ள காவியாவோ பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் 30 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ள நிலையில், அதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன - பில்கேஸ்ட் சந்திப்பு!
கொரோனா வைரஸின் கொப்புகள் அனைத்தும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - இராணுவ தளபதி தெரிவிப்பு!
யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஒன்றுகூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார நடைமுறையை மீற...
|
|
|


