சீனா பயணிக்கவுள்ளார் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்!
Wednesday, July 26th, 2023
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவி;ற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஆசியாவை இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய நிகழ்வொன்றில் பங்கேற்பதாக இந்த விஜயம் அமையவுள்ளதாக ரஸ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
சீனா விஜயத்தினைத் தொடர்ந்து அவர் துருக்கிக்கும் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் இடம்பெறவிருக்கும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ரஸ்ய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
அமெரிக்காவில் இருந்து கியூபாவுக்க 5 தசாப்தத்தின் பின் பயணித்த பயணிகள் விமானம்!
ரஷ்ய அதிபர் புட்டின் கார் விபத்து: வாகன ஓட்டுனர் ஸ்தலத்திலேயே பலி?
ஹைதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 304 பேர் பலி!..
|
|
|


