சீனா எச்சரிக்கை – தாய்வானில் தரையிறங்கிய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் – அமெரிக்கா – சீனா இடையேயான இராணுவப் பூசல் அதிகரித்து போர் மூளும் அபாயம்!

Wednesday, August 3rd, 2022

சீனாவின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி, அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர் -நான்சி பெலோசி, ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தாய்வானுக்குச் சென்றுள்ளார்.

அமெரிக்க இராணுவம் இந்த பயணத்தை விரும்பவில்லை என்று அந்த நாட்டின் ஜனாதிபதி பைடன் தெரிவித்திருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்டுள்ள தாய்வானுக்கான இந்த பயணம்,பல தசாப்தங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவரின் முதல் பயணமாகும்.

சீனா, தாய்வானை பிரிந்து சென்ற மாகாணமாக பார்க்கிறது. அது சீனாவுடன் சேரவேண்டிய பகுதி என்றும் சீனா கூறி வருகிறது.

இந்தநிலையில் பெலோசியின் தாய்வான் பயணம், ஆத்திரமூட்டி, ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவை எச்சரித்துள்ளன.

இதற்கிடையில் சீன ஜெட் விமானங்கள் தாய்வான் ஜலசந்தியைக் கடந்து வருவதாக அந்த நாட்டு அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவை எஸ்யு-35 போர் விமானங்கள் என்று கூறப்படுகிறது.

நான்சி பெலோசியின் விமானம் உள்ளூர் நேரப்படி 22:44 மணிக்கு தைபேயின் சாங்ஷன் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்தநிலையில் அவரது வருகையை எதிர்த்து சீன சார்பு குழு ஒன்று, அவர் தங்கப்போகும் விருந்தகத்துக்கு வெளியே ஒரு சிறிய போராட்டத்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நியூட் கிங்ரிச் தாய்வானுக்கு சென்று திரும்பிய பின்னர், அங்கு பயணம் செய்த மிக மூத்த அமெரிக்க அரசியல்வாதி பெலோசி ஆவார்.

பெலோசி காலை தாய்வான் ஜனாதிபதி சாய் யிங்வெனை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சீன அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியில் அமெரிக்க மக்களவை சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) அம்மையார் நேற்றிரவு தைவானுக்குச் சென்றடைந்ததை அடுத்து அந்த அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான  இராணுவப் பூசல் அதிகரித்து போர் மூளும் அபாயம் அதிகரித்திருக்கிறது.

பெலோசி அம்மையார் நேற்று 2ம் திகதி இரவு அங்கு சென்றறடைந்தார்,இன்று அதி காலை முதல் தைவான் தீவைச் சுற்றி சீனா அதன் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது.

தைவானுக்கு அருகே வான்,தரை,ஆகாய, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சீனா உத்தியோக பூர்வமாக அறிவித்து விட்டே இந்த பயிற்சிகள் ஆரம்பமாகி உள்ளன.

தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் குறைந்தது 21 சீனப் போர்விமானங்கள் அத்துமீறி பிரவேசித்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

சீனாவின் போர்க்கப்பல்களும் அந்த வட்டாரத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தைவானைச் சுற்றிய 6 பகுதிகளில் சீன இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன .

அதேவேளை தைவானின் கிழக்குப் பகுதியில் 4 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்கின்றன என்பதும் . அவற்றுள் ஒன்று அணுவாயுதச் சக்தி கொண்ட, விமானங்களை ஏந்திச் செல்லும் போர்க்கப்பல் என்பதும் குறிப்பிடத் தக்கது .

பெலோசி அம்மையார் தைவானுக்குச் சென்றிருப்பதால் அந்தக் கப்பல்கள் அங்கே அனுப்பப்படவில்லை என்றும் , அவை வழக்கமான பணிகளுக்காக அங்கு ஏற்கனவே உள்ளன என்றும் அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, தைவானும் அதன் ராணுவக் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அதன் போர்விமானங்கள் தயார்நிலையில் உள்ளன எனவும், எந்த அச்சுறுத்தலையும் கையாளும் நம்பிக்கை தமக்கு உள்ளதாகத் தைவானின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

00

Related posts: