சீனாவை மிரட்டும் அமெரிக்கா!

Monday, June 6th, 2016

தென் சீனக் கடல் பகுதியில், சீனா வான் வழி தற்காப்பு மண்டலம் அமைப்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெரி சீனாவை எச்சரித்துள்ளார்.

அப்பகுதி ஆத்திரமூட்டுவதும், நிரந்தர தன்மையை சீர்குலைப்பதாகவும் இருந்தால் அமெரிக்கா இது பற்றி ஆராயும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்வதால் சீனாவுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரிக்கும்.

மங்கோலியாவுக்கு குறுகியதொரு பயணம் மேற்கொண்டபோது பத்திரிகையாளர்களிடம் கெரி இதனை தெரிவித்தார்.

தென் சீனக் கடலின் பெரும் பகுதியை தன்னுடையதாக உரிமை கோரும் சீனா, “பிரச்சினைகளை கண்டு பயமில்லை” என்று கூறி அமெரிக்காவின் விமர்சனத்தை நிராகரித்துள்ளது.

சாச்சைக்குரிய கடல் எல்லையானது, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்பட பிற நாடுகளால் உரிமை கொண்டாடப்படுகிறது.

Related posts: