சீனாவைத் தொடர்ந்து இத்தாலி மக்களை காவுகொள்ளும் கொரோனா!

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயித்து 807 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, இத்தாலி, ஈராக் உள்ளிட்ட 30-க்கும் அதிமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இத்தாலியில் 650 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
போர் நிறைவடைந்த போதிலும் மொசூலில் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்கின்றன - ஐ.நா.
உலகக் கிண்ணம்: ஆர்ஜன்டீன அணி அறிவிப்பு !
வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினா? சிறைக்கு செல்லும் அபாயம்!
|
|