கனடா எல்லை பகுதிகள் சேவை அதிகாரி மீது எல்லை தாண்டிய கடத்தல் குற்றச்சாட்டு!

Sunday, December 11th, 2016

கனடா எல்லை பகுதிகள் முகாமை அதிகாரி ஒருவர் மீது கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ஆர்.சி.எம்.பி தெரிவிக்கின்றது.

கூட்டு படைகள் ஒன்றின் விசாரனையின் ஒரு பகுதியாக இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் அமைப்பானது சட்டப்படி தடைசெய்யப்பட்ட புகையிலையை லாரிகளில் யு.எஸ்சிலிருந்து கனடாவிற்குள் கொண்டுவந்தமை குறித்த புலன்விசாரனையில் இக்கைது நடந்துள்ளது.

இக்குழுவினரின் கடத்தல் நடவடிக்கைகள் ஒரு கனடா எல்லை சேவைகள் முகாமையை சேர்ந்த அதிகாரி-Peace Bridge in Fort Erie, Ont.-யினால் எளிதாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுகளும் கைப்பற்றலும் கனடா மற்றும் யு.எஸ்சில் ஒரே நேரத்தில் இடம்பெற்றது. மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. பொது அதிகாரி ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்தார் என 37-வயதுடைய வெலன்ட் ஒன்ராறியோவை சேர்ந்த சாட் கேல் என்பவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

bsa1

Related posts: