போர் நிறைவடைந்த போதிலும் மொசூலில் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்கின்றன – ஐ.நா.

Wednesday, July 12th, 2017

ஈராக்கின் மொசூல் நகரிலிருந்து பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்ற போதிலும் அங்கு மனிதாபிமான மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்ந்து வருவதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

மொசூல் வெற்றியானது பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான போராட்டத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றகரமான படி என்று ஐ.நா. பொதுச் செயலாளரின் ஊடகப் பேச்சாளர் ஸ்டீஃபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர் ”மொசூல் நகர் மீட்பானது பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். அதேவேளைஇ ஈராக் மக்களின் தைரியம்இ உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றுக்கு செயலாளர் நாயகம் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

அத்துடன்இ பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்திய அவர்இ பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பயங்கரவாதத்திடமிருந்து விடுபட்ட பகுதிகளில் தேவையான பணிகளை முன்னெடுத்தல் இடம்பெயர்ந்த சமூகங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தல்இ சட்டத்தை நிலைநிறுத்துதல் மீண்டும் வன்முறை ஏற்படுவதை தவிர்த்தல் ஆகிய காரணிகளுக்காக ஈராக் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஐ.நா. தயாராக உள்ளதாகவும்” அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: