சீனாவில் 27 வெளிநாட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு – சீன வெளிவிவகார அமைச்சு !
Tuesday, February 11th, 2020
பெப்ரவரி 10 ஆம் திகதி நிலவரப்படி, சீனாவில் 27 வெளிநாட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்து விட்டதாகவும் அந் நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி பெப்ரவரி 06 ஆம் திகதி அமெரிக்க பிரஜையொருவரும், 08 ஆம் திகதி ஜப்பானிய பிரஜையொருவரும் உயிரிழந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்களில் மூவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வுஹான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது தற்போது 28 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மாத்திரம் உயிரிழந்தவர்களின் தொகை 1013 ஆக அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டோரின் தொகையும் அங்கு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
Related posts:
தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை!
உலக வங்கியினால் கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேரிக்கு செலுத்த முடிந்துள்ளது - லிட்ரோ நிறுவன...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரி...
|
|
|


