பொது நலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பொதுநலவாய செயலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி, சர்ச் ஹவுஸில் பொதுநலவாய வெளிவிவகார மற்றும் அபிவிருத்திக்கான பொதுநலவாய செயலாளர் ஜேம்ஸ் கிளீவ்லி ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகத் தலைவர்களுடன் நட்புறவு கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் 8.23 அளவில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் டுபாயிலிருந்து ஈ கே 650  என்ற எமிரேட்ஸ் விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: