யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்
Wednesday, October 25th, 2017
யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் நாளை வியாழக்கிமை(26) காலை- 07 மணியிலிருந்து மறுநாள் வெள்ளிக்கிழமை காலை-07 மணி வரையான 24 மணி நேரம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் இன்று(25) செய்திக் குறிப்பொன்றைய வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
சம்பள முரண்பாடு மற்றும் பதவி உயர்வு வழங்கலிலுள்ள முரண்பாடுகளைத் தீர்க்கக் கோரி நிறைவுகாண் மற்றும் துணை மருத்துவ சங்கத்தினருடன் இணைந்து அரச தாதி உத்தியோகத்தர் சங்கமும் நாடு முழுவதும் நாளை காலை-07 மணி முதல் 24 மணித்தியாலங்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுகின்றது.
எமது தாய்ச் சங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம்.
இது தொடர்பான அறிவிப்பை நேற்று முன்தினம் திங்கட்கிழமை வைத்தியசாலை நிர்வாகத்துக்கு வழங்கிவிட்டோம்.
இந்தப் போராட்டத்தின் போது அவசர மற்றும் நோயாளர்களின் உயிர்காக்கும் நடவடிக்கைகளின் மட்டும் தாதிய உத்தியோகத்தர்கள் பணியாற்றுவார்கள்.
எமது போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு எமது மன வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கடல் நீரின் pH அளவில் மாற்றம் இல்லை - நாரா நிறுவனம் தெரிவிப்பு!
பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு - ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அரசியலமைப்பு பே...
சர்வமத தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!
|
|
|


