சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தது உக்ரைன்!

Wednesday, November 16th, 2022

இந்தோனேசியாவின் பாலித்தீவில் ஆரம்பித்த உலகின் முக்கிய பொருளாதார வலுக்கொண்ட நாடுகளின் ஜி20 மாநாட்டில் பங்கெடுத்த மேற்குலகத் தலைவர்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய கண்டனங்கள் வெளிப்பட்டுள்ள அதேநேரம், உலகின் உணவு நெருக்கடிக்கு பாதுகாப்பை வழங்கும் தீர்வுகள் அலசப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜி20 மாநாட்டில் மெய்நிகர் வழியில் உரையாற்றிய உக்ரைனின் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆரம்பித்த ஜி20 உச்சிமாநாட்டில் தனது அமைதித் திட்டத்தை முன்வைத்த உக்ரைனிய அதிபர் அதில் அணுசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, ரஷ்யாவின் போர்க்குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் மற்றும் ரஷ்யாவுடனான இறுதி சமாதான ஒப்பந்தம் உட்பட்ட 10 அம்சங்களை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

அத்துடன் ரஷ்யாவின் அணுசக்தி அச்சுறுத்தல்களை கைவிடச் செய்யவேண்டுமானால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியின் மீதான விலை வரம்பை நடைமுறைப்படுத்த ஜி20 நாடுகள் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: