சிரிய யுத்த நிறுத்தத்திற்கு ரஷ்யா மற்றும் துருக்கி இணக்கம்!

சிரியாவில் தேசிய அளவில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இந்த யுத்த நிறுத்தம் கடந்த புதன்கிழமை முதல்அமுலுக்கு வரும் என்று துருக்கி அரச செய்தி நிறுவனமான அனடொலு செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இம்மாத ஆரம்பத்தில் எட்டப்பட்ட அலப்போ நகர யுத்த நிறுத்தத்தை விரிவுபடுத்தும் நோக்கிலேயே உடன்பாடு எட்டப்பட்டதாக அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது. இது நாடெங்கும் பொதுமக்களை இடம்பெயரச் செய்ய உதவும்.
எனினும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் எட்டப்பட்ட முந்தைய யுத்த நிறுத்தங்கள் போல், தீவிரவாதக் குழுக்கள் இந்த யுத்த நிறுத்தத்திலும் உள்ளடக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த யுத்த நிறுத்தம் கசக் தலைநகர் அஸ்டானாவில், சிரிய அரசு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான அமைதிப் பேச்சுக்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை ரஷ்யா மற்றும் துருக்கியின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ளது. சிரிய சிவில் யுத்தத்தில் ரஷ்ய மற்றும் துருக்கி எதிர் எதிர் தரப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசை பதவி கவிழ்க்க துருக்கி ஆதரவளிக்கும் நிலையில் ரஷ்யா மற்றும் ஈரான் அஸாத்தின் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன.
Related posts:
|
|