சிரிய மோதலுக்கு முடிவுகட்ட அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கம்!
Saturday, September 10th, 2016
நாளை மறுதினம் திங்கட்கிழமை (12) சூரிய அஸ்தமனத்திலிருந்து சிரியாவில் நடைபெறும் போர் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இணக்கமொன்றுக்கு எட்டப்பட்டுள்ளதாக ரஷ்யாவும் ஐக்கிய அமேரிக்காவும் அறிவித்துள்ளன.
மேற்குறித்த திட்டத்தின் கீழ், எதிரணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் குறிப்பிட்ட பகுதிகளில், சிரிய அரசாங்கம் தாக்குதல்களை நிறுத்தவுள்ளது. இது தவிர, ஐ.எஸ் ஆயுதக் குழு மற்றும் அல்-நுஸ்ரா ஆயுததாரிகளை அழிப்பதற்கு, ரஷ்யாவும் அமெரிக்காவும் கூட்டு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளன.
ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே மேற்கூறப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related posts:
இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் சுஸ்மா கண்டனம்!
ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் - மியன்மார் இராணுவம்!
போலந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் - இருவர் பலி - ரஷ்யாவின் மீது சந்தேகம் - ரஷ்யாவினால் ஏவப்பட்டவை...
|
|
|


