போலந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – இருவர் பலி – ரஷ்யாவின் மீது சந்தேகம் – ரஷ்யாவினால் ஏவப்பட்டவையாக இருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, November 16th, 2022

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து நாட்டுக்குள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்ப அறிக்கைகளின்படி ரஷ்ய ஏவுகணைகளே போலத்தில் வீழ்ந்து வெடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

இதேநேரம் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தகவலை மறுக்கிறது. அத்துடன் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் ஆத்திரமூட்டல் சம்பவம் இது என்றும் அந்த அமைச்சகம் கூறுகிறது.

இந்த ஏவுகணையை யார் ஏவினார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா கூறியுள்ளார்.

இதேவேளை இந்தோனேசியா – பாலியில், கூடியுள்ள ஜி 20 நாடுகளின் தலைவர்கள், இந்த சம்பவம் குறித்து விவாதித்துள்ளனர்.

இதற்கிடையில் போலந்தில் வீழ்ந்த ஏவுகணைகள், ரஷ்யாவினால் ஏவப்பட்டவையாக இருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

முழுமையான விசாரணைகள் முடியும் வரை எதனையும் கூறமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: