சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரானியர்கள் பலி!
Tuesday, May 1st, 2018
சிரியாவின் வட பிராந்தியமான ஹமா மற்றும் அலெப்போ மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்தெரிவிக்கின்றன.
இதன் போது ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் குறித்து சரியான விபரங்கள் வெளியாகாத போதிலும் அரச சார்பான ஆயுததாரிகள் 26 பேர் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவை தளமாக கொண்ட கண்காணிப்பு குழுவொன்று தெரிவித்துள்ளது.
மேலும் இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரானியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வட கொரியாவுக்கு 8 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குகிறது தென்கொரியா!
2021 இல் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு இந்தியர்!
எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது - ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இந்திய வெளிவிவகார அ...
|
|
|


