சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தடை செய்யப்பட்ட மருந்து !

Saturday, July 1st, 2017

சிரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதலில் சரின் எனப்படும் தடை செய்யப்பட்ட மருந்து வகை உபயோகிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மையை கண்டறியும் குழுவொன்று வெளியிட்ட அறிக்கையிலிருந்து இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் “அனைத்து விடயங்களையும் வைத்து பார்க்கும் போது சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதலுக்கும் சிரிய ஜனாதிபதி பஷர் – அல் – அஸாட்டிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது என எண்ணத் தோன்றுகின்றது” என தெரிவித்தார்.

இருப்பினும் குறித்த குற்றச்சாட்டை சிரிய அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மற்றும் ஓ.பி.சி.டப்ளியூ ஆகிய இரு அமைப்புக்கள் ஒன்றிணைந்து இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: