எகிப்து விமான கடத்தலுக்கு தீவிரவாத சதி காரணம் அல்ல: சைப்ரஸ் அதிபர் தகவல்!

Tuesday, March 29th, 2016

எகிப்து நாட்டுக்குச் சொந்தமான ‘எகிப்து ஏர்’ பயணிகள் விமானம் ஒன்று அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து கெய்ரோ செல்லவிருந்த பயணிகள் விமானம், சைப்ரஸுக்கு கடத்தப்பட்டது. இந்த விமானத்தில், 55 பயணிகளும் 7  விமான சிப்பந்திகளும் இருந்தனர் .விமானத்தில் இருந்த வெளிநாட்டவர் 4 பேர், விமான சிப்பந்திகள் தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விமான கடத்தியவரின் பெயர் இப்ரஹாகீம் சம்ஹா என செய்தி வெளியாகியுள்ளது. அலெக்ஸாண்டரியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சம்ஹா,  அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தனது முன்னாள் மனைவியை காண்பதற்காக  விமானத்தை கடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடி குண்டு பெல்ட் அணிந்திருந்தாக சம்ஹா கூறியதும் பொய் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

எகிப்து ஏர் விமானத்தை கடத்திய நபர் தீவிரவாதி அல்ல என சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் அனாஸ்டாஸியேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை எகிப்து நாட்டு அரசு செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

Related posts: