ஹொங்கொங் அரசாங்கத்தை சாடும் எட்வட் ஸ்நோடன்!

Thursday, July 20th, 2017

ஹொங்கொங் அரசாங்கத்தின் குடிவரவு திணைக்கள செயற்பாடு குறித்து அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான எட்வட் ஸ்நோடன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்ட குற்றசாடட்டில் எட்வட் ஸ்நோடன் வெளிநாடொன்றில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் எட்வட் ஸ்நோடனுக்கு உதவியவர்களுக்கு ஆதரவாக செயற்படும் வழக்கறிஞர் barrister Robert Tibboக்கு எதிராக ஹொங்கொங் குடிவரவு திணைக்களம் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதனையடுத்து எட்வட் ஸ்நோடன் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஹொங்கொங் அரசாங்கம் எனக்கு உதவிய குடும்பங்களை பாதுகாக்கும் வழக்கறிஞருக்கு எதிராக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது” என பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவிற்கு செல்வதற்கு முன்னர் ஹொங்கொங்கில் வைத்து தனக்கு உதவிய குடும்பங்களை பாதுகாக்க வழக்கறிஞர் ஒருவரை ஸ்நோடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். ஹொங்கொங் உள்ளூர் நிர்வாகம் ஏழு வழக்குகளில் இருந்து தன்னை அகற்றுவதற்காக “திட்டமிட்ட முயற்சிகளை” மேற்கொண்டுள்ளதாக ஸ்நோடன் அறிமுகப்படுத்தி வைத்த வழக்கறிஞர் Tibbo தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கறிஞரின் கருத்துப்படி குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி அரசாங்க சட்ட உதவித் திட்டத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் சேவை, ஏழு புகலிடம் கோரிக்கையாளர்களின் வழக்கறிஞரை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts: