சிரியாவிலுள்ள தனியார் மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல்! 13 பேர் பலி

சிரியாவில் உள்ள தனியார் மருத்துவமனை மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியா நாட்டில் நடந்து வரும் நீண்ட கால போரால் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் லட்சக்கணக்கில் பலியாகி வருகின்றனர்.
இவற்றில் கடந்த 10 ஆண்டுகளில், அந்நாட்டின் மருத்துவமனைகள் மீது 400இற்கும் மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளில் மருத்துவ வசதிகளை பெறுவதற்காக இதுபோன்ற தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஆப்ரின் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மீது குர்தீஷ் போராளிகள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் நோயாளிகள் உள்பட பொதுமக்களில் 13 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர, 27 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
000
Related posts:
|
|