சிரியாவின் தாற்காலிக போர் நிறுத்த முயற்சி தோல்வி!

Tuesday, September 6th, 2016

சிரியாவில் தாற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதநேய உதவிகள் சென்றடையவும், மோதல்களை நிறுத்தவும் கடைசி சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவை ஜி20 நாடுகள் உச்சி மாநாடு நடைபெற்றபோது சந்தித்தார்.

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவும், முற்றுகையிடப்பட்டுள்ள சமூகங்களுக்கு உதவிகள் வழங்க அனுமதிக்கவும் அனைத்து தரப்பினரையும் ஐ.நா வேண்டிக்கொண்டது.

ஆனால், அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டங்கிளில் சிரியா அரசு படைப்பிரிவுகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் முற்றுகையிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் நட்புறவோடு செயல்படும் சிரியா அதிபர் பஷார் அல் அசாத், அவருடைய எதிரிகளிடம் இருந்து எல்லைகளை கைப்பற்றி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ரஷியா ஒப்புகொள்ள மிகவும் குறைவான வாய்ப்பே உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

160827044813_us_secretary_of_state_john_kerry_l_and_russian_foreign_minister_sergei_lavrov_geneva_640x360_ap_nocredit

Related posts: