சவுதி அரேபிய இளவரசர் முகமட் பின் சல்மானுக்கு அல்கொய்தா எச்சரிக்கை!
Tuesday, June 5th, 2018
சவுதி அரேபிய இளவரசர் முகமட் பின் சல்மானுக்கு அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் பதவி ஏற்றதன் பின்னர் சவுதியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக பெண்கள் சுதந்திரமாக செயற்படும் உரிமையை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சவுதி இளவரசர் பெண்களுக்கு அளவிற்கு அதிகமாக சுதந்திரம் வழங்கும் மேற்கத்தேய கலாசார தழுவல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும், இல்லாவிடில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அல்கொய்தா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் உரையாடினார் டொனால்ட் டிரம்ப்!
ஐ.எஸ். நிலைகள் மீது எகிப்து இராணுவம் தாக்குதல் - 19 பேர் பலி!
புதுச்சேரியில் முதல்வராகிறார் ரங்கசாமி!
|
|
|


