சர்வதேச விமானங்களை நிறுத்தியது ஈராக்!

Monday, October 2nd, 2017

ஈராக்கின் வட பகுதியில் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்திஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக 92 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பை எதிர்த்து வரும் ஈராக் மத்திய அரசு, குர்திஸ்தான் பகுதிக்குச் செல்ல வேண்டிய, சர்வதேச விமானங்களை இரத்து செய்துள்ளது.

குர்திஸ்தான் பகுதியில் உள்ள இர்பில், சுலைமானியா விமான நிலையங்களின் கட்டுப்பாட்டை தங்களிடம் ஒப்படைக்காவிட்டால், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே அங்கு செல்லும் என்று பாக்தாத் அறிவித்துள்ளது.  “இங்கே சர்வதேச சமூகம் இங்கே இருக்கிறது. எனவே இந்த நடவடிக்கை குர்து மக்களுக்கு மட்டும் எதிரானதல்ல,” என்று தெரிவித்தார்.

இர்பில் விமான நிலைய இயக்குநர் தலார் ஃபைக் சாலி.  மனிதாபிமான, ராணுவ மற்றும் தூதரகம் சார்ந்த விமானங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு இருப்பதாக பிறகு அவர் கூறினார்.

பாக்தாதின் கோரிக்கையை ஏற்று தங்கள் விமானங்களை ரத்து செய்யவுள்ளதாக லுஃப்தான்சா, ஆஸ்திரியன் ஏர் லைன்ஸ், துருக்கிஷ் ஏர் லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த தடை சட்டவிரோதமானது, குர்துக்களுக்கு எதிரான தண்டனை என்று குர்திஸ்தான் வட்டார அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், குர்திஷ் பேஷ்மேர்கா படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வளம் மிக்க கிர்குக் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு ராணுவத்தை அணுப்பும்படி இராக் பிரதமரை அந்நாட்டுப் பாராளுமன்றம் கேட்டுக் கொண்டதை எதிர்கொள்ள சட்ட நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் குர்திஸ்தான் வட்டார அரசு சூளுரைத்துள்ளது.

ஏற்கனவே, இர்பில், சுலைமானியா விமான நிலையங்கள் ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.  இந்தத் தடை ஐ.எஸ். படையினருக்கு எதிரான போரை பலவீனப்படுத்தம் என்றும் குர்திஸ்தான் வட்டார அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: