சர்ச்சையில் சிக்கிய மலேசிய நிதியத்தின் நிர்வாகம் பதவிவிலக முடிவு!

மலேசியாவில் உள்ள அரசாங்க முதலீட்டு நிதியத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் விதத்தில் வெளியான நாடாளுமன்ற அறிக்கையை தொடர்ந்து, அந்த நிதியத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவும் பதவி விலக முன்வந்துள்ளது.
பில்லியன் கணக்கான டாலர் நிதியுடன் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களை முறையாக நிர்வகிக்க 1எம்டிபி (1MDB) என்ற அந்த நிதியம் தவறியுள்ளதாக குறித்த பல்கட்சி அறிக்கை கூறியுள்ளது.தனது குறைபாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள அந்த நிதியத்தின் நிர்வாகக் குழுவினர், பதவி விலகுவது தான் செய்யவேண்டிய சரியான வேலை என்று கூறியுள்ளனர்.
மலேஷியாவில் பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்ட 1எம்டிபி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் பிரதமர் நஜீப் ரஸாக்-இன் பதவிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.பிரதமர் நஜீப் ரஸாக் தான் 2009- ம் ஆண்டில் இந்த நிறுவனத்தை நிறுவினார்
Related posts:
ஜாம்பியாவின் ஜனாதிபதியாக மீண்டும் எட்கர் லுங்கு!
ஐ . நாவின் புதிய பொதுச்செயலாளர் தெரிவானார்!
சீனா அளித்து வரும் கடன்கள் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் - அமெரிக்கா கவலை!
|
|