ஜாம்பியாவின் ஜனாதிபதியாக மீண்டும் எட்கர் லுங்கு!

Tuesday, August 16th, 2016

ஜாம்பியாவின் ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடிகள் நடைபெற்றது என்ற எதிர்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் மீண்டும் அதிபராக எட்கர் லுங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமையன்று நடைபெற்ற தேர்தலில் எட்கர் லுங்கி 50 சதவீதத்துக்கும் சற்று கூடுதலான வாக்குகளை பெற்று, ஏறக்குறைய 48 சதவீத வாக்குகள் பெற்ற போட்டியாளர் ஹகைண்டே ஹிச்சிலிமாவை தோற்கடித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எதிர்கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர், தேர்தல் ஆணையம் அதிபர் லுங்குவிற்கு சாதகமாக நடந்துக் கொண்டதாகவும், அரசியலமைப்பு நீதிமன்றத்தில் இந்த முடிவு குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.. தேர்தல் முடிவுகளில் உள்ள தாமதம் மற்றும் முரண்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் நீதிமன்றத்தில் புகார் அளித்தன. வெளிநாட்டு பார்வையாளர்கள், இந்த தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்றும் ஆனால் ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொண்டன என்றும் அறிவித்துள்ளனர்.

Related posts: