மத்யூ சூறாவளியால் ஹேய்ட்டியில் 900 பேர் பலி?

Saturday, October 8th, 2016

கடந்த செவ்வாய் கிழமையன்று, ஹேய்ட்டியின் தென்மேற்கு பகுதி முழுவதையும் கடுமையாக சேதப்படுத்திய மத்யூ சூறாவளி காரணமாக சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில், தென் மேற்கு ஹேய்ட்டியில் அணுக முடியாத வகையில் இருக்கக்கூடிய பகுதிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொலைத்தூர கடலோர நகரங்களில், ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், சில பகுதிகள் முழுவதுமாக சேதமடைந்திருப்பதாகவும், அனைத்து கட்டடங்களும் சரிந்து விழுந்திருப்பதாகவும் தொண்டு நிறுவன பணியாளாரான கேட் கோரிகன் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர்கள், புல்டோசர்கள், தண்ணீர் வழங்கும் வாகனங்கள் மற்றும் மருத்துவ உதவிகளையும், நிவாரண உதவிகளில் ஈடுபட துருப்புகளையும் அமெரிக்கா அனுப்பி உள்ளது. மத்யூ சூறாவளி தற்போது வலுவிழந்து வரும் நிலையில், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பலமான காற்று மற்றும் அதிக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.

_91630002_fc4c5df3-0694-4f56-8721-202191373478

Related posts: