கொல்கத்தா- பங்களாதேஷ் இடையே43 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில் சேவை!

Saturday, November 11th, 2017

43 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா- பங்களாதேஷ் இடையே மீண்டும் ரெயில் சேவை போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது.

தற்போதைய பங்களாதேஷ் பாகிஸ்தானுடன் இணைந்து கிழக்கு பாகிஸ்தானாக இருந்த போது கொல்கத்தா- குல்னா இடையே பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்து இருந்தது.

இதற்கிடையே பங்களாதேஷ் சுதந்திரத்துக்காக இந்தியா- பாகிஸ்தான் போர் நடைபெற்ற போது இங்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது இங்கு மீண்டும் ரெயில் போக்குவரத்து ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.

அது குறித்து கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி இந்தியா வந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திரமோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து 43 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா- குல்னா இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொல்கத்தா- குல்னா ரெயில் போக்குவரத்து 172 கி.மீட்டர் தூரமாகும். அதில் 456 இருக்கைகள் உள்ளன

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசும் போது இன்று இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் மிகப் பெரிய நாள் என குறிப்பிட்டார்.

Related posts: