படகு கவிழ்ந்து விபத்து – 100 பேர் வரை பலி!
Friday, March 22nd, 2019
ஈராக் மொசூல் நகரில் உள்ள டைக்ரிஸ் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 100 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஈராக் உள்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த அனர்த்தம் ஏற்பட்ட போது படகில் சுமார் 200 பேர் வரை இருந்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பலியானவர்களில் 19 சிறார்களும், 61 பெண்களும் அடங்குகின்றனர்.
அத்துடன் 55 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஈராக் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி மையம்!
மாவட்ட இளைஞர் விளையாட்டு கபடியில் தெல்லிப்பழை வெற்றி!
உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்!
|
|
|


