சர்ச்சைக்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி!

அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.
இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 6 ஆம் திகதி இடைத்தேர்தல்கள் நடைபெறும் நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதை தெரிவித்துள்ளார்.
இதற்கு என சிறப்பு சட்டம் இயற்ற இருப்பதாகவும், அதற்காக வெள்ளை மாளிகை வக்கீல்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
Related posts:
சசிகலாவால் 15 ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்தேன் - பன்னீர்செல்வம்!
கிரேக்க முன்னாள் பிரதமர் குண்டுவெடிப்பில் காயம்!
பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்துமாறு பங்களாதேஷ் கோரிக்கை!
|
|