சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற இராணுவத்திற்கு உத்தரவு!
Friday, February 1st, 2019
ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என இராணுவ தலைமை அலுவலகம் உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் ராவல் பிண்டியில் இயங்கும் இராணுவ தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய இராணுவ இரகசியங்கள் மற்றும் தகவல்கள் கசிவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீனாவில் மரண தண்டனை பெற்றவருக்கு 20 ஆண்டுக்கு பின் ரூ.2.75 கோடி நஷ்டஈடு!
சரியான பதிலடி கொடுப்போம் - சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை!
தொடர்ந்தும் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத் தளபதி தெ...
|
|
|


