சசிகலா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை: சிறையில் பாதுகாப்பு தீவிரம்!
Friday, February 17th, 2017
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மீது தாக்குதல் நடைபெறலாம் என்ற மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் திடீர் மரணத்துடன் சசிகலா தொடர்புபட்டிருப்பதாக சந்தேகங்கள் வெளியாகிவந்த நிலையில், அதன் எதிரொலி சிறையில் வெளிப்படலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள தமிழ் பெண் கைதிகள் சிலர் சசிகலாவை தாக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவ்வாறு இல்லையேல், சசிகலா தரப்பு திட்டமிட்டு இவ்வாறனதொரு தாக்குதல் நாடகத்தை அரங்கேற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று சசிகலா நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரது வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன. குறித்த தாக்குதலை மேற்கொண்டிருந்தவர்கள் சசிகலா ஆதரவாளர்கள் எனவும், அது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


