கனடா பிரதமருக்கு கடந்தகால வரலாற்றை நினைவூட்டிய டிரம்ப்!

Friday, June 8th, 2018

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யும் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு தேசிய பாதுகாப்பு நலன் கருதி கட்டணம் நிர்ணயித்தார் டிரம்ப். இது குறித்து கடந்த மாதம் 25-ஆம் தேதி கனடா பிரதமர் ட்ரூட்டோ அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது தேசிய பாதுகாப்பு நலன் கருதி கட்டணம் நிர்ணயிப்பதை எப்படி நியாயப்படுத்த போகிறீர்கள் என்று ட்ரூட்டோ கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த டிரம்ப், நீங்கள் வெள்ளை மாளிகைக்கு தீ வைக்கவில்லையா? என்று கேட்டுள்ளார்.
இந்நிலையில், ட்ரூட்டோ அமெரிக்கா கொண்டுவந்த வடஅமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்து இருநாடுகளுக்கு இடையிலான புதிய ஒப்பந்தத்தை கொண்டுவரும் திட்டத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
முன்னதாக…
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தகம் நடைபெறுவதற்காக வடஅமெரிக்க தடையற்ற ஒப்பந்தம் 1994-ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவாத அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்துவந்தார்.
இதையடுத்து, இந்த ஒப்பந்தத்தில் புதிய விதிமுறையை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. நீண்ட நாட்களாக இது குறித்தான பேச்சுவார்த்தை நடத்தியும் 3 நாடுகளிடம் இருந்து முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையில் தான் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யும் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்தார் டிரம்ப். இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பட்சத்தில் இரும்பு மற்றும் அலுமினியம் மீது நிர்ணயித்துள்ள 25 சதவீத கட்டணம் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
பின்னர், 3 நாடுகளுக்கிடையில் இருக்கும் வடஅமெரிக்கா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்து அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தினார் டிரம்ப். இந்நிலையில், கனடா பிரதமர் அதனை நிராகரித்துவிட்டார்.
ஆரம்பம் முதலே கனடா பிரதமர் ட்ரூட்டோ 3 நாடுகளுக்கிடையில் இருக்கும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து பாராட்டி வந்தார். அதனால், அதனை நீக்குவதற்கு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஒத்துழைக்கவில்லை.
ஆனால், டிரம்ப் கூறிய அந்த வெள்ளை மாளிகை எரிப்பு நிகழ்வு என்பது 1812-இல் ஒரு போரின் போது அப்போதைய பிரிட்டீஷ் ஆங்கிலேயர்கள் வாஷிங்டன் மீது நடத்திய தாக்குதலை குறிப்பிட்டு கேட்டுள்ளார். இந்த தாக்குதலானது, கனடாவுக்கு உட்பட யார்க் மற்றும் ஒன்டோரியோ ஆகிய இடங்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தான். அதுவும் அப்போதைய ஆங்கிலேயர்கள் நடத்திய தாக்குதல். இது தான் வரலாறு என குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனை மனதில் வைத்தே வெள்ளை மாளிகை எரித்தது கனடா என்ற ரீதியில் டிரம்ப் கேட்டுள்ளதாக தெரிகிறது.

Related posts: