சசிகலாவின் பிடியிலா முதல்வர் ஜெயலலிதா!

Friday, October 14th, 2016

இத்தனை காலமாக, முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் யாரும் நெருங்கமுடியாமல் இரும்புத்திரையை போட்டிருந்தார் அவரது தோழி சசிகலா. இதனால், அரசியல்ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் டெல்லியில் இருந்து பி.ஜே.பி. தலைவர்கள் யாரும் ஜெயலலிதாவை தொடர்பு கொள்ளமுடியவில்லை.

ராஜதந்திரமாக கையாளவேண்டிய பல விவகாரங்களை முதல்வர் என்கிற முறையில் ஜெயலலிதாவிடம் மட்டுமே பேசவேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், ஜெயலலிதாவுடன் நிழலாக சசிகலா இருந்து வந்தது மத்திய அரசுக்கு எரிச்சலைக் கொடுத்தது. மத்திய உளவுத்துறையின் தமிழக தலைவராக வர்மா ஐ.பி.எஸ். சில மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார். டெல்லியில் பிரபல அரசியல் தலைவர்களுடன் சகஜமாக பேசும் அவரால் முதல்வர் ஜெயலலிதாவுடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அப்பாயின்ட்மென்ட் என்றாலே, பல்வேறு செக்போஸ்டுகளை சந்திக்க வேண்டிவந்தது. அதை அவர் விரும்பவில்லை. ‘போயஸ்கார்டனில் சசிகலா கஸ்டடியில் இருக்கிறார்… அரசு நிர்வாகத்தில் மறைமுகமாக அவரும் அவரது குடும்பத்தினரும் தலையிடுகிறார்கள்’ என்று மத்திய உளவுத்துறை ரிப்போர்ட்டை மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்த நிலையில்தான், ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போலோவில் அட்மிட் செய்யப்பட்டார். ஜெயலலிதாவைப் பார்க்க தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேரில் போனபோது, ஜெயலலிதாவை நேரில் சந்திக்க விடவில்லை. ‘இதுதான் சசிகலா தரப்பினர் செய்த பெரிய தவறு. கவர்னரின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார் சசிகலா. அதன்பிறகுதான், மத்திய அரசு தலையிட ஆரம்பித்தது.

ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றியும், சசிகலாவின் கஸ்டடியில் ஜெயலலிதா இருப்பது பற்றியும் சில சந்தேகங்களை திடீரென சசிகலா புஷ்பா மீடியாக்களிடம் கிளப்பினார் அல்லவா?…இதன் பின்னணி டெல்லி மேலிட அரசியல் பிரமுகர்களுக்குத்தான் தெரியும். அதேபோல், சசிகலாவின் உக்கிரப் பார்வையில் சிக்கி பதவி இழந்தவர்கள், கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் யார் யார் என்று பெரிய பட்டியலை மத்திய உளவுத்துறையினர் ரெடி செய்துவிட்டனர். அவர்களை வைத்தும் அ.தி.மு.க-வில் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். ஜெயலிதாவின் அண்ணன் மகள் தரப்பினர் அப்போலோவுக்குள் போக முயன்றபோது, தடுத்து விரட்டப்பட்டார். அவரையும் சசிகலாவின் எதிர்தரப்பினர் நேரில் சந்தித்து வருகிறார்கள். விரைவில் அவரிடம் இருந்தும் சசிகலாவுக்கு எதிரான கருத்து வெளியாகலாம். டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் இருவர் வந்ததுதான் வெளி உலகத்துக்கு தெரியும். ஆனால், டெல்லியில் இருந்து கில்லாடிகளான உளவுத்துறை அதிகாரிகள் ஆறு பேர்கள் அப்போலோவுக்கு வந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 27 பேர் சென்னையில் பல்வேறு ரகசிய அசெய்ன்மெண்ட்டுகளை செய்து வருகின்றனர். பி.ஜே.பி-க்கு சாதகமான சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்துவதுதான் அவர்களின் அசெய்ன்மெண்ட். தமிழக கவர்னர்தான் இவர்களுக்கெல்லாம் தற்போதைக்கு ‘பாஸ்’. அவரை வைத்துதான் அரசியல் சதுரங்கத்தை நகர்த்த ஆரம்பித்துள்ளனர் டெல்லி பி.ஜே.பி. தலைவர்கள்.
அப்போலோவில் மாற்றங்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் இருந்து தனது பிரதிநிதிகளாக இரண்டு பிரபல டாக்டர்களை பிரதமர் மோடி சென்னை அப்போலோவுக்கு அனுப்பினார். அவர்கள் வந்ததும் இங்கே நிலைமை மாற ஆரம்பித்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான விவரங்களை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டனர். அனைத்து வகை டெஸ்ட் ரிப்போர்ட்டுகளையும் எய்ம்ஸ் டாக்டர்கள் பார்த்து, உடனுக்குடன் பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க ஆரம்பித்தனர். எய்ம்ஸ் டாக்டர்கள் வரும்வரை, சசிகலாவின் அண்ணன் மருமகன் டாக்டர் சிவக்குமார் முழு கண்காணிப்பில்தான் ஜெயலலிதா இருந்துவந்தார். எய்ம்ஸ் டாக்டர்கள் ஆலோசனை சொல்ல ஆரம்பித்தும், ஒரங்கட்டப்பட்டார் சிவக்குமார். அவரின் வாய்ஸ் எடுபடவில்லை. இது அப்போலோ மருத்துவமனையைப் பொறுத்தவரையில் நடந்த மாற்றங்கள்.

ஒ. பன்னீர்செல்வம் யார் சாய்ஸ்?

நிச்சயமாக கவர்னர் சாய்ஸ்தான். ஆனால், ஜெயலலிதாவின் அறிவுரைப்படி என்கிற சாமர்த்தியமான வார்த்தையைப் போட்டு அறிக்கை விட்டிருந்தார். ஆனால், சசிகலா தரப்பினர் அவர்களின் உறவினரும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவருமான திருநாவுக்கரசரைப் பிடித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்…இருவரிடமும் பேசி தங்களுக்கு அரசியல் அரவணைப்பு வழங்க கோரிக்கை விடுத்தனர். அதையடுத்துதான், ராகுல் அப்போலோவுக்கு கிளம்பி வந்தார். சசிகலா தரப்பினர் காங்கிரஸ் பக்கம் சாயக் காரணம்.. பி.ஜே.பி-யின் அதிரடியில் இருந்து தப்பிக்கத்தான். டெல்லியில் இருந்தபடி தமிழக அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறும்போது, ”சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, சசிகலா போட்டுக்கொடுத்து ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கப்பட்ட அமைச்சர்களில் ஒ. பன்னீர் செல்வமும் ஒருவர். பல்வேறு ரெய்டுகளுக்கு பன்னீர் செல்வமும், அவரது குடும்பத்தினரும் ஆளானார்கள். இதனால், சசிகலாவின் மீது கடுங்கோபத்தில் பன்னீர்செல்வம் இருந்தார். அவர் இந்தமாதிரி மூடில் இருப்பது மத்திய உளவுத்துறை மூலம் டெல்லி பி.ஜே.பி. தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆக, ஜெயலலிதாவின் துறைகளை யார் கவனிக்கலாம் என்கிற பேச்சு வந்தபோது, சசிகலா தரப்பினர் சிபாரிசு செய்தவர்களை புறக்கணித்துவிட்டு, டெல்லி பி.ஜே.பியின் சாய்ஸ் ஆக ஒ. பன்னீர் செல்வத்தை கவர்னர் நியமிக்க முன்வந்தார். அதுதான் நடந்தேறியது. கொஞ்ச நாட்களுக்கு பன்னீர்செல்வம் பொறுமையாக இருப்பார். அதன்பிறகு, அவரின் இன்னொரு பக்கத்தை சசிகலா தரப்பினர் சந்திப்பார்கள். அவர் வெறும் அம்புதான். அவரை இயக்குவது மத்திய அரசாக இருக்கும்” என்றார்.
அவரிடம், ‘இது எப்படி சாத்தியமாகும்?’ என்றோம்!.

” மத்திய அரசு நினைத்தால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் தன் வலையில் வீழ்த்தும். ஏற்கெனவே பன்னீர்செல்வம், அவரது மகன்கள், உறவினர்கள் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த விஷயங்களை தனி ஃபைல் போட்டு ரெடியாக வைத்திருக்கிறார்கள். அதன் விவரங்களை அரசல்புசலாக மத்திய அரசு பரப்பினாலே போதும். பிறகு, பன்னீர்செல்வம் தலையாட்டி பொம்மை ஆகிவிடுவார். சசிகலா தரப்பினரை பன்னீர்செல்வமே பார்த்துக்கொள்வார். ஏனென்றால், அவர்தானே.. முதல்வரின் துறைகளை கவனிப்பவர். ஜெயலலிதாவின் உடல்நிலை, மருத்துவமனை சிகிச்சை…இதெற்கெலலாம் அவர்தான் பொறுப்பு. எந்தப் பிரச்னை எழுந்தாலும், அவர்தான் அதை தீர்க்கவேண்டும். போயஸ்கார்டனில் சசிகலா கஸ்டடியில் ஜெயலலிதா என்கிற நிலைமை இனி எந்தக்காலத்திலும் வராது. வரவும் விடாது மத்திய அரசு. பொறுத்திருந்து பாருங்கள்” என்கிறார்.

சசிகலா மூவ்?

சசிகலாவின் மூத்த நாத்தனார் வனரோஜா சில நாட்களுக்கு முன்பு, தஞ்சையில் இறந்துபோனார். அவரின் இறுதிச்சடங்கில் கூட சசிகலா போய் கலந்துகொள்ளவில்லை. ஜெயலலிதாவை விட்டு எங்கும் செல்லாமல் அருகிலேயே இருக்கிறார். சசிகலா இல்லாத நேரங்களில் இங்கு ஏதாவது அரசியல் செய்துவிடுவார்களோ? என்று மிரண்டு போயிருக்கிறார். மெள்ள மெள்ள சசிகலா பிடியில் இருந்து ஜெயலலிதா விலகிவருகிறார் என்றுதான் தமிழக அமைச்சர் ஒருவர் அவரது நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். . (நன்றி இணையம்)

_91352299_6190d06d-8819-41e8-b442-e3129925b178 (1)

Related posts: