கோரிக்கையை நிராகரித்த துருக்கி!
Saturday, June 24th, 2017
கட்டாரிலுள்ள துருக்கி இராணுவத் தளத்தை மூடுமாறு நான்கு அரபு நாடுகள் விடுத்த கோரிக்கையினை துருக்கி நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இராணுவத் தளம் வளைகுடாவில் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2014ஆம் ஆண்டு கட்டாருடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை என துருக்கியின் பாதுகாப்பு அமைச்சரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக கட்டார் மீதான தடையை நீக்க 13 கோரிக்கைகளை நிபந்தனையாக சவூதி அரேபியா பஹ்ரைன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ளன. இந்த 13 கோரிக்கைகளில் கட்டாரிலுள்ள துருக்கியின் இராணுவ தளத்தையும் உடனடியாக மூடவேண்டுமெனவும் நிபந்தனை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மயன்மாரின் இராணுவம் - கிளர்ச்சி இராணுவமும் மோதல்!
இங்கிலாந்தில் உச்சமடையும் வெப்பம் - வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருந்த பகுதிகள் தற்போது மோசமான நிலையை...
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
|
|
|


