மயன்மாரின் இராணுவம் – கிளர்ச்சி இராணுவமும் மோதல்!

Friday, September 8th, 2017

கடந்த இரு வாரங்களில் 164,000 அகதிகள் மயன்மாரில் இருந்து  பங்களாதேஷுக்கு வந்திறங்கி இருப்பதாக வியாழனன்று ஐநா தெரிவித்துள்ளது .

மயன்மாரின் இராணுவமும் , கிளர்ச்சி இராணுவமும் மோதலில் இறங்க , இவர்கள் தொகை தொகையாக வெளியேறுகிறார்கள் . பிந்திய தகவல்களின் அடிப்படையில் , கால் மில்லியனுக்கு மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம்கள் , கடந்த வருடம் . ஒக்டோபர் மாதம் முதல் தடவையாக  போர் வெடித்த பின்பு , நாட்டி விட்டு ஓடிப் போயிருக்கிறார்கள் .

ஆகஸ்ட் 25அன்று ரோஹிங்கியா இராணுவத்தினர் ,மேற்கொண்ட தாக்குதல்களில் பல இராணுவத்தினர் இறந்ததை அடுத்தே , நாட்டை விட்டு வெளியேறுவது சமீபத்தில்  ஆரம்பித்துள்ளது . கடந்த ஒக்டோபருக்கும் ஆகஸ்ட் 25க்கும் இடையிலான காலகட்டத்தில் 87,000அகதிகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள் .இங்கு ஆட்சியில் இருக்கும் , நோபல் பரிசு பெற்ற, Aung San Suu Kyi, அயுங் சன்சூ,  கதைகளை திரிபுபடுத்தி ஊடகங்கள்  பிரசுரிப்பதாக குற்றம்சாட்டி  வருகிறார்

மயன்மாரின் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பதோடு , பெரும்பான்மை  பௌத்தர்களைக் கொண்ட மயன்மாரில் வாழ , அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது

Related posts: