மியான்மரில் சூ கியின் ஆலோசகர் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார்

Tuesday, March 15th, 2016

மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் என்.எல்.டி. என்று அழைக்கப்படுகிற சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

மியான்மர் அதிபர் வேட்பாளராக சூ கியின் நம்பிக்கை பெற்ற யூ கதின் கியாவ் ,71 தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர், துணை அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில் 652 எம்.பி.க்கள் கொண்ட இரு சபைகளில், 360 வாக்ககள்  சூ கி கட்சிக்கு கிடைத்தது. அக்கட்சியின் கதின் கியாவ்  அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

ராணுவ பலம் கொண்ட கட்சியின் மைன்ட் ஸ்வே 213 வாக்குகள் பெற்று துணை அதிபராக தேர்வு பெற்றார். ஏப்.1-ம் தேதி இவர்கள் பதவியேற்கலாம் என தெரிகிறது.

புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள  யூ கதின் கியாவ், சூ கியின் நம்பிக்கைக்குரிய அரசியல் ஆலோசகர், பள்ளிக்கூடத்தில் அவருடன் ஒன்றாக படித்தவர் ஆவார்.

யூ கதின் கியாவ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். அவரது மனைவி சூ சூ, மியான்மர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

Related posts: